/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நிதியை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெண் பி.டி.ஓ., கைது
/
நிதியை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெண் பி.டி.ஓ., கைது
நிதியை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெண் பி.டி.ஓ., கைது
நிதியை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: பெண் பி.டி.ஓ., கைது
ADDED : செப் 05, 2024 07:39 PM

நரிக்குடி:விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் ரோடு அமைத்ததற்கான நிதியை விடுவிக்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் (பி.டி.ஓ.,) ஜெயபுஷ்பம் 48, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் இலுப்பைகுளம்- சொக்காயிஅம்மன் கோயிலுக்கு ரூ. 5 லட்சத்தில் சிமென்ட் ரோடு அமைக்கும் பணியை ஒப்பந்ததாரர் ரமேஷ் காண்ட்ராக்ட் எடுத்திருந்தார். இவரிடம் கண்காணிப்பாளராக பணிபுரியும் சேந்தநதி அஜித்குமார் 26, மேற்பார்வை செய்து ரோடு அமைக்கும் பணியை முடித்தார்.
அதற்கான நிதியை விடுவிக்க நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயபுஷ்பத்தை அணுகினார். பில் பாஸ் செய்ய அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார். பிறகு ரூ.3 ஆயிரம் தரும்படி பி.டி.ஓ., பேரம் பேசினார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் அஜித்குமார் புகார் செய்தார். போலீசார் அளித்த அறிவுரையின்படி அஜித்குமார் நேற்று மதியம் ஜெயபுஷ்பத்திடம் பணம் வழங்கிய போது லஞ்ச ஒழிப்பு ஏ.டி.எஸ்.பி., ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சால்வன் துரை, எஸ்.ஐ., பூமிநாதன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.