/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காலாவதியான முறுக்கு சாப்பிட்டு உடல் பாதித்தவருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு
/
காலாவதியான முறுக்கு சாப்பிட்டு உடல் பாதித்தவருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு
காலாவதியான முறுக்கு சாப்பிட்டு உடல் பாதித்தவருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு
காலாவதியான முறுக்கு சாப்பிட்டு உடல் பாதித்தவருக்கு ரூ. 5 ஆயிரம் இழப்பீடு
ADDED : ஆக 15, 2024 03:42 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துாரில் காலாவதியான முருக்கு சாப்பிட்டு உடல்நலம் பாதித்த தம்பதிக்கு இழப்பீடாக ரூ.5 ஆயிரம் வழங்க மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. இவர் ஏப்.4 ல், திருநெல்வேலி மாவட்டம் ஆவரைக்குளம் அருண் ஸ்நாக்ஸ் நிறுவனம் தயாரித்த 2 முறுக்கு பாக்கெட்டுகளை ஸ்ரீவில்லிபுத்தூர் ஏ.எல்.என். சூப்பர் மார்க்கெட்டில் ரூ. 90 கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனை ஏப்.9 அன்று செல்லத்துரையும், அவரது மனைவியும் சாப்பிட்டவுடன் வாந்தியும், வயிற்றுப்போக்கும் ஏற்பட்டுள்ளது. பின்னர் முறுக்கு பேக்கிங்கை பார்த்த போது 2024 பிப். 2ல் தயாரிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் காலாவதியான முறுக்கை சாப்பிட்டதால் பாதிக்கப்பட்ட தனக்கும், தன் மனைவிக்கும் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் செல்லத்துரை வழக்கு தொடர்ந்தார்.
இதனை நுகர்வோர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர் முத்துலட்சுமி விசாரித்தனர்.
இதில் விற்பனைத் தொகை ரூ.90ஐ திரும்ப வழங்கவும், இழப்பீடாக ரூ.5 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரத்தை விற்பனை செய்த நிறுவனமும், தயாரித்த நிறுவனமும் சேர்ந்தோ அல்லது தனித்தோ பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதே போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக, சூப்பர் மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இலவசமாக ஒரு மரக்கன்று தொடர்ந்து மூன்று மாதங்கள் வழங்கவும், மரம் வளர்ப்பதின் பயன்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை இருவரும் சேர்ந்து அல்லது தனித்தோ வழங்கவும் வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.