ADDED : மே 06, 2024 12:21 AM
விருதுநகர் : விருதுநகரில் கடந்தாண்டு சாலை விபத்தில் உயிரிழந்த போலீஸ் கார்த்திகேயன் குடும்பத்திற்கு 2009 ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் பணியில் சேர்ந்த 4724 போலீசார் இணைந்து ரூ. 25.16 லட்சம் நிதியுதவி வழங்கினர்.
விருதுநகர் சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீஸ் கார்த்திகேயன் கடந்தாண்டு அக். 16 இரவில் மதுரை -- சாத்துார் நான்கு வழிச்சாலையில் விபத்தில் சிக்கி பலியானர். இவரின் குடும்பத்திற்கு தமிழகம் முழுவதும் 2009 முதல் போலீஸ் பணியில் சேர்ந்த 4724 போலீசார் ஒன்றிணைந்து கார்த்திகேயனின் 10 வயது மகள் பெயரில் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரத்து 357, 4 வயது மகன் பெயரில் ரூ. 12 லட்சத்து 47 ஆயிரத்து 355 காப்பீடு தொகையாக வழங்கினர்.
மேலும் மனைவி பெயரில் மீதமுள்ள ரூ.15 ஆயிரத்து 674, காப்பீட்டு தொகைக்கான கமிஷன் தொகை ரூ. 25 ஆயிரம், புதிதாக பணியில் சேர்ந்த போலீசார் ரூ.16 ஆயிரத்து 500 என மொத்தம் ரூ. 25 லட்சத்து 16 ஆயிரத்து 389 க்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினர்.