நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி பெரியகுளம் கண்மாய் கரையில் பசுமை மன்றம், ரோட்டரி கிளப் சிவகாசி பைரோசிட்டி சார்பில் மியாவாக்கி முறையில் மரக்கன்று நடப்பட்டது.
சிவகாசி மாநகராட்சி அலுவலகம் பின் பகுதியில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் கரையில் 1.75 கி.மீ., நீளம், 12 அடி அகலத்தில் கரைகள் பலப்படுத்தப்பட்டது.
இதில் மியாவாக்கி முறையில் 50 ஆயிரம் மரக்கன்றுகள் நட முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.
அசோகன் எம்.எல்.ஏ., சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் துவக்கி வைத்தனர். ரோட்டரி கவர்னர் காந்தி, துணை கவர்னர் சிவக்குமார் ராஜா, பசுமை மன்ற நிர்வாகிகள் செல்வகுமார், சுரேஷ் தர்கர், பாலகிருஷ்ணன், ரவி அருணாச்சலம், ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி பைரோ சிட்டி தலைவர் அருண், செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

