/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள்
/
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் மரக்கன்றுகள்
ADDED : ஜூலை 03, 2024 05:28 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் ராஜகோபுரத்தில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் வளர்ந்து வருவதால் கோபுரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
இதனால் அவவைகளை அப்புறப்படுத்த கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழக அரசின் முத்திரை சின்னமான இக்கோயில் ராஜகோபுரம் 196 அடி உயரம் கொண்டது.
இந்நிலையில் கோபுரத்தின் கீழிருந்து மேலாக பல்வேறு நிலை பகுதிகளில் சிறிய செடிகள் முதல் அரச மரகன்றுகள் பல்வேறு இடங்களில் வளர்ந்துள்ளது.
இவைகள் பெரிதாகும் போது கோபுரத்திற்கு பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, ராஜகோபுரத்தில் வளர்ந்துள்ள அனைத்து வகை செடி, கொடிகள், மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த ஆண்டாள் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.