/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மரக்கன்றுகள்
/
திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மரக்கன்றுகள்
திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மரக்கன்றுகள்
திருமங்கலம் -- ராஜபாளையம் நான்கு வழிச்சாலையில் மரக்கன்றுகள்
ADDED : ஜூன் 09, 2024 02:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர், : திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை அமைக்கப்பட்டு வரும் நான்கு வழிச்சாலையில் தற்போதே எளிதில் வளரும் மரகன்றுகளை நட்டு வளர்க்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த வழித்தடத்தில் ரோட்டின் இருபுறமும் பழமையான மரங்ன்றுகள் அதிகளவில் இருந்தது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து, மக்கள் பயணித்து வந்தனர். தற்போது நான்கு வழிச்சாலையில் இருந்து மரங்கள் முழுஅளவில் அகற்றப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இந்நிலையில் திருமங்கலம் முதல் ராஜபாளையம் வரை ரோட்டில் மரங்கள் இல்லாமல் வெயில் மற்றும் மழை நேரங்களில் டூவீலரில் வரும் வாகன ஓட்டிகள் ஒதுங்கி நிற்க இடமின்றி தவிக்கும் நிலை காணப்படுகிறது.
எனவே, குறுகிய காலத்தில் விரைந்து வளரும் மரகன்றுகளை அதிகளவில் நட்டு முறையாக பராமரித்து, மரங்கள் நிறைந்த பசுமை வழிச் சாலையை உருவாக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.