ADDED : ஜூலை 05, 2024 11:11 PM
போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு
சிவகாசி காளிஸ்வரி கல்லுாரியில் போதை மருந்து எதிர்ப்பு குழு சார்பில் மாணவர்களுக்கு போதை பொருட்கள்,அதன் தீமைகள் பற்றிய சிறப்பு சொற்பொழிவு நடந்தது.
காளீஸ்வரி நிறுவன இயக்குனர் ராஜேஷ் தலைமை வகித்தார். உதவி பேராசிரியர் குமரன் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்தினார். சென்னை போதை கட்டுப்பாட்டு பணியகம் உளவுத்துறை அதிகாரி அருண்குமார் பேசுகையில், வரும் காலங்களில் போதைப் பொருட்களில் இருந்து மாணவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒரே வழி அவர்கள் சுய ஒழுக்கத்துடன் வாழ வேண்டும், என்றார். தேசிய மாணவர் படை அதிகாரி கணேஷ் பாபு நன்றி கூறினார்.
திறனாய்வு நிகழ்வு
சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் முதுகலை தமிழ் துறை சார்பில் நுால் களஞ்சியம் நுால் திறனாய்வு நிகழ்வு நடந்தது. கல்லுாரி முதல்வர் அசோக் தலைமை வகித்தார். முதுகலை தமிழ்த்துறை தலைவர் அருள்மொழி துவக்கி வைத்தார். தலைமையாசிரியர் முனியாண்டி பேசினார். மாணவி தங்க வைஷ்ணவி அர்த்தநாரின் மறுபாதிகள் என்று புத்தகத்தை திறனாய்வு செய்தார். மாணவன் சின்னராசு தொகுத்து வழங்கினார். மாணவி மனிஷா நன்றி கூறினார்.