ADDED : ஆக 11, 2024 06:09 AM
புரிந்துணர்வு ஒப்பந்தம்
சிவகாசி: பி.எஸ்.ஆர்., பொறியியல் கல்லுாரி மேலாண்மை துறை சார்பில் கார்ப்பரேட் சோசியல் அமைப்பு துவக்க விழா, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுதல் நடந்தது. கல்லூரி இயக்குனர்கள் அருண்குமார், விக்னேஸ்வரி தலைமை வகித்தனர் .முதல்வர் செந்தில்குமார் வரவேற்றார். டீன் மாரிசாமி வாழ்த்தினார். சிவகாசி ரைட் கிளப் பார் எஜுகேஷன் ஆலோசகர் சந்திர ராஜன் பேசினார். மாணவர்களுக்கு தன்னார்வ தொண்டு வளர்ப்பதனை நோக்கமாக கொண்டு கல்லுாரி, ஆர்.சி.இ., இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஏற்பாடுகளை மேலாண்மை துறை தலைவர் கண்ணன் பேராசிரியர்கள் வெங்கடேஷ், குரு பிரசாத் செய்தனர்.
கருத்தரங்கம்
சிவகாசி: எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி வணிகவியல் துறை, கல்லுாரி முன்னாள் மாணவிகள் சங்க நிதி உதவியுடன் சிவகாசி ஐ.சி.ஏ.ஐ., அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி ராஜபாளையம் ராஜூஸ் கல்லுாரி சார்பில் வரி விதிப்பு நுட்பங்கள் என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது. கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். புளியங்குடி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி பேராசிரியர் சத்ருகன் பாபு, நிறுவன செயலர் ஜெகன், ஆடிட்டர் ஸ்ரீதர் பேசினர்.
விழிப்புணர்வு
சிவகாசி: காளீஸ்வரி கல்லுாரி மாணவர்கள் ஆலோசனைக் குழு, உள்புகார்கள் குழு சார்பில் மனித கடத்தல் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நடந்தது. கல்லுாரி துணை முதல்வர் முத்துலட்சுமி வரவேற்றார். முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். சிவகாசி சார்பு நீதிமன்றம் நீதிபதிகள் முருகவேல், அமலநாத கமலக்கண்ணன், துணை தலைமை சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் பார்த்தசாரதி பேசினர். ஸ்ரீவில்லிபுத்துார் மூத்த நிர்வாக உதவி மாவட்ட சட்ட சேவைகள் ஆணையர் பிலோமின் நன்றி கூறினார்.