ADDED : ஆக 04, 2024 06:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி ஆறுமுகம் பழனிக்குரு மாடர்ன் சி.பி.எஸ்.இ., பள்ளியில் 12வது ஆண்டு விளையாட்டு விழா நடந்தது.
நிறுவனர் ஆறுமுகம் தலைமை வகித்தார். தாளாளர் பழனிக்குரு முன்னிலை வகித்தார். முதல்வர் சத்தியமூர்த்தி வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் செருக்கு ராஜா ஆண்டறிக்கை வாசித்தார். மாணவர்களின் அணிவகுப்பு உட்பட போட்டிகள் நடந்தன. மாணவர்களுக்கு பரிசு, பதக்கங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்வி ஆலோசகர் சித்ராதேவி, ஆசிரியர்கள் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியை ஸ்மித்தா நாயர் நன்றி கூறினார்.