/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனுமதி ரத்தான நிலையில் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்
/
அனுமதி ரத்தான நிலையில் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்
அனுமதி ரத்தான நிலையில் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்
அனுமதி ரத்தான நிலையில் இயங்கிய பட்டாசு ஆலைக்கு சீல்
ADDED : ஆக 04, 2024 06:14 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே உரிமம் ரத்து செய்யப்பட்டநிலையில், விதிமீறி இயங்கிய பட்டாசு ஆலைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல் வைத்து, அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மீனாட்சிபுரத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விதிமீறல் காரணமாக உரிமம் ரத்து செய்யப்பட்டிருந்தது. தாசில்தார் முத்துமாரி தலைமையில் வருவாய் துறையினர், போலீசார் நேற்று காலை 11:00 மணிக்கு அந்த பட்டாசு ஆலைக்கு சென்றனர். அப்போது அங்கு 50 தொழிலாளர்களுடன் ஆலை செயல்பட்டு கொண்டிருந்தது.
இதையடுத்து அங்கு வேலை செய்த தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அங்கிருந்த பல லட்சம் ரூபாய் பட்டாசுகளை பறிமுதல் செய்து ஆலைக்கு சீல் வைத்தனர்.