/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அனைத்து அமைச்சர்களையும் சொத்து குவிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் சொல்கிறார் சீமான்

ADDED : ஆக 09, 2024 02:28 AM
சிவகாசி,:''சொத்து குவிப்பு குறித்து அனைத்து அமைச்சர்களையும் அழைத்து விசாரிக்க வேண்டும். அதிகாரத்தில் இருப்பவர்கள் அதை தவறாக பயன்படுத்தி சொத்து குவிப்பதை எப்படி ஏற்க முடியும்,'' என, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
சிவகாசி அருகே ராமுதேவன்பட்டியில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சீமான் மேலும் கூறியதாவது: சொத்து குவிப்பு தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் மீதான வழக்கை திரும்ப விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டதை வரவேற்கிறேன்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் சம்பளம் வழங்கவில்லை என போராடி வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வளர்வதை கண்டு தி.மு.க., பா.ஜ., அஞ்சுகிறது.
நாங்கள் கையில் எடுத்த முருகனை தற்போது இரு கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.
பா.ஜ., ஆட்சியைப் பிடித்து பத்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டுள்ளது என்றார்.