/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மான் வேட்டை துப்பாக்கி பறிமுதல்
/
மான் வேட்டை துப்பாக்கி பறிமுதல்
ADDED : செப் 08, 2024 02:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியான மம்சாபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார தோப்பு பகுதியில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடமாடிக் கொண்டிருந்த மூன்று பேர் கும்பலைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்தனர்.
அப்போது, அவர்களிடமிருந்த இரண்டு மான் கொம்புகள், ஒரு துப்பாக்கியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். மம்சாபுரம் போலீசாரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் அவர்களிடம் விசாரித்து வருகின்றனர்.