நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய மின்சாரம் , மின்னணுவியல் துறை மாணவர்கள் குழுவின் மூன்று நாள் கருத்தரங்கு நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் வாழ்த்தினர். டீன் தேவராஜ் வரவேற்றார். மலேசிய பேராசிரியர் சாங் யூங் சூன், டி.ஆர்.டி. ஓ. விஞ்ஞானி கோபி, போலந்து பல்கலை பேராசிரியர் மைக்கேல் சாசிங்கி உட்பட பல்வேறு பல்கலைக்கழக பேராசிரியர்கள் பேசினர்.
178 ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்பிக்கபட்டது. மாநாடு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. பேராசிரியை அருணா ஜெயந்தி நன்றி கூறினார்.

