ADDED : மார் 06, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்:விருதுநகர் காமராஜ் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரியில் மாவட்டத்தை சேர்ந்த தொழில்முனைவோர் மையமாக மாற்றும் முயற்சியாக முதலீட்டாளர்கள், தொழில் நிபுணர்களுடன் நேரடி சந்திப்பு நடந்தது. தொழில் வளர்ச்சிக்கு முக்கியமான இணைய வாய்ப்புகள், புதிய தொழில் நிறுவனங்களின் சாத்திய, சந்தர்ப்பங்கள், மற்ற நிறுவனங்களுடன் கூட்டு வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம் நடந்தது.
கலெக்டர் ஜெயசீலன், மாணவர்கள் தொழில் முனைவோராக மாறுவதற்கான வாய்ப்புகள்குறித்து பேசினார். கல்லுாரி செயலாளர் தர்மராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலகிருஷ்ணன், இணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீமுருகன், கல்லுாரி முதல்வர் செந்தில், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.