ADDED : ஆக 17, 2024 12:49 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் ரமணாஸ் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கருத்தரங்கம் நடந்தது.
மகளிர் கல்லூரி செயலர் இளங்கோவன் வரவேற்றார். வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசான துரைகண்ணம்மாள் கலந்து கொண்டு, மாணவிகளுக்கு கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு, வீரம் பற்றி பேசினார்.
சுபேதார் மேஜர் மருதகாசி, சுபேதார் மேஜர் உதயசூரியன் இந்திய ராணுவத்தின் நாட்டை பாதுகாக்கும் முறை, ராணுவ வேலை வாய்ப்புகள் பற்றி விளக்கினர்.
கல்வி குழும சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன், நிர்வாககுழு உறுப்பினர்கள் பாரதிமுருகன், போக்குவரத்துச்செயலர் விக்னேஷ், கலைக்கல்லூரி முதல்வர்தில்லை நடராஜன், பி.எட்., கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் பேசினர். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.
துணை முதல்வர் பவுர்ணா நன்றி கூறினார்.

