ADDED : ஆக 26, 2024 05:37 AM
சிவகாசி:
சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி முதுகலை ஆராய்ச்சி இயற்பியல் துறை சார்பில் தேசிய விண்வெளி தினத்தை நிலவை தொடும்போது உயிர்களைத் தொடுதல், இந்தியாவின் விண்வெளி சாகா என்ற கருப்பொருளின் கீழ் சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியதின் முதலாம் ஆண்டு சிறப்பை கொண்டாடும் வகையில் கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை வகித்தார். இயற்பியல் துறை தலைவர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். மாணவிகளுக்கு கை ஓவியம், பென்சில் ஓவியம், மாதிரி தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் மன்றம் மாநில செயலாளர் பரமசிவம், விருதுநகர் மாவட்டத் தலைவர் குருவையா, செயலாளர் சுந்தரராமன் நடத்தினர். குரேசியா ஹவர் கண்காணிப்பகம் ஆராய்ச்சியாளர் சுரேஷ், விருதுநகர் செந்திக் குமார நாடார் கல்லுாரி இணை பேராசிரியர் ஜெயக்குமாரன் பேசினார்.

