/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் பெட்டிகள் அதிகரிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
/
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் பெட்டிகள் அதிகரிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் பெட்டிகள் அதிகரிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயில் பெட்டிகள் அதிகரிக்க பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : மே 31, 2024 06:47 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் வழியாக செல்லும் செங்கோட்டை -- மயிலாடுதுறை ரயிலில் கூட்டம் அதிகமாக உள்ளதால் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
மயிலாடுதுறை -- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 11:10 மணிக்கு புறப்பட்டு இரவு 9:30 மணிக்கு செங்கோட்டை வந்து சேரும்.
மறு மார்க்கத்தில் செங்கோட்டை - - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செங்கோட்டையில் இருந்து காலை 7:10 மணிக்கு புறப்பட்டு மாலை 5:10 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும். இதில் ஒரு கார்டு பெட்டி தவிர்த்து 10 முன்பதிவில்லா பெட்டிகள் மட்டுமே உள்ளன.
கொரோனா நேரத்திற்கு முன் இதே ரயில் செங்கோட்டை -- மதுரை வரை மட்டும் இயக்கப்பட்டு வந்தது. அப்போது 16 பெட்டிகளாக இயக்கப்பட்டது. மயிலாடுதுறை வரை இயக்க வேண்டும் என தொடர் கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து மயிலாடுதுறை வரை மாற்றி இயக்கப்பட்டது.
மதுரை கோட்ட பராமரிப்பில் இருந்து இந்த ரயில் திருச்சி கோட்டத்திற்கு மாற்றப்பட்ட பின் 10 பெட்டிகளாக குறைக்கப்பட்டது.
தற்போது காலை ரயில் 9:30 மணிக்கு விருதுநகருக்கும், மாலை ரயில் 5:30 மணிக்கு மதுரைக்கும், 6:10 மணிக்கு விருதுநகருக்கும் வருகிறது. 10 பெட்டிகளிலும் அதிகளவு கூட்டநெரிசல் ஏற்படுகிறது. காலை 9:30 மணிக்கு விருதுநகர் வருகிறது. இந்த ரயில் சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ரயில் காலை செங்கோட்டையில் துவங்கி தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், திருமங்கலம், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை செல்கிறது.
மதுரையில் தொழில் விஷயத்திற்காக, படிப்புக்காக, கண் மருத்துவத்திற்காக நடுத்தர வயதினர், கல்லுாரி மாணவர்கள், முதியவர்கள் சென்று வருகின்றனர்.
10 பெட்டிகளே உள்ளதால் ஒரு நாள் கூட விருதுநகர் மாவட்ட பயணிகள் உட்கார்ந்து வந்ததில்லை. கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
சீசன் டிக்கெட் எடுத்து அரசு ஊழியர்களும் பயணித்து வருகின்றனர். ஆகவே தெற்கு ரயில்வே கூடுதல் பெட்டிகளுடன் செங்கோட்டை - - மயிலாடுதுறை ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.