/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
செப். 27ல் தபால் குறைதீர் முகாம்
/
செப். 27ல் தபால் குறைதீர் முகாம்
ADDED : செப் 06, 2024 04:38 AM
விருதுநகர்; முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செய்திக்குறிப்பு:
விருதுநகர் கோட்ட அளவிலான தபால் சேவை குறைதீர் முகாம் செப். 27 காலை 11:00 மணிக்கு முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், விருதுநகர் 626 001 என்ற முகவரியில் நடக்கிறது.
செப்., 20க்குள் புகார் மனுக்கள் வந்து சேர வேண்டும். தபால் சம்மந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி, நேரம் அனுப்பியவர், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்மந்தமாக இருப்பின் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர், முகவரி, பாலிசிதாரரின் பெயர், முழு முகவரி, பணம் செலுத்திய விவரம், அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்மந்தப்பட்ட கடித தொடர்புகள் ஏதேனும் இருப்பின் அதையும் புகாருடன் இணைக்க வேண்டும், என்றார்.