ADDED : மார் 26, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அருகே நாரணாபுரம் பச்சையம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டீஸ்வரி. காண்ட்ராக்ட் பிடித்து பட்டாசு தயாரித்து வரும் தனக்கு சொந்தமான லோடுவேன், டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு மர்ம நபர்கள் லோடு வேன், டூவீலருக்கு தீ வைத்தனர். இரண்டும் முற்றிலும் எரிந்து நாசமானது.
கிழக்கு போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்.

