/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
-தெருவில் ஓடும் கழிவுநீர், பள்ளமான ரோடுகள்
/
-தெருவில் ஓடும் கழிவுநீர், பள்ளமான ரோடுகள்
ADDED : ஆக 05, 2025 06:42 AM
ராஜபாளையம் : மகளிர் பொது சுகாதார வளாக வசதி இன்மை, வாறுகால் வசதியின்றி வழிந்தோடும் சாக்கடை, சமுதாய கூடம், பள்ளமான ரோடுகள் என பல்வேறு பிரச்னைகளில கொருக்காம் பட்டி ஊராட்சி மக்கள் திணறி வருகின்றனர்.
ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கொருக்காம்பட்டி ஊராட்சியில் மூக்கர்நத்தம், செல்லம்பட்டி, செந்தட்டியாபுரம், கோட்டைபட்டி, கொருக்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் கடைசி பகுதியில் அமைந்துள்ள இந்த ஊராட்சி ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்துடனும், தாலுகா வெம்பக்கோட்டையும், தொகுதி சாத்துாரிலும் அமைந்துள்ளதால் அடிப்படை வசதிக்கு முறையிட தொலை துாரம் செல்ல வேண்டி உள்ளது. கிராமத்தில் மகளிருக்கு சுகாதார வளாக வசதி இல்லாததால் திறந்த வெளியை பயன்படுத்தி வருகின்றனர். மூக்கர்நத்தத்தில் இளைஞர்களுக்கு விளையாட்டு திடல் இல்லை.
கொருக்காம்பட்டி இந்திரா காலனி எதிரே அமைந்துள்ள குடியிருப்புகளுக்கு ஜல்ஜீவன் திட்ட இணைப்புக்கு குடியிருப்பு வாசிகளே குழாய் பதிப்பு செலவுகளை ஏற்க ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஊராட்சி அலுவலகம் உள்ள பாதையும் மண் ரோடாக உள்ளதால் மழை நேரங்களில் பாதிக்கிறது .வீடுகளுக்கான தண்ணீர் சப்ளைக்கு தோண்டிய தெருக்களில் பணிகள் முடிந்தும் பள்ளங்களை சரி செய்யவில்லை.
கோட்டைப்பட்டி கிராம மேல்நிலை தொட்டியும், சமுதாயக் கூடமும் பழுதடைந்து காணப்படுவதுடன் இடிந்து விழும் அபாயத்தால் பயன்படுத்த முடியவில்லை. மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் மூலம் குழாய்கள் பதித்து தண்ணீர் சப்ளை இல்லை. பராமரிப்பற்ற நாய்கள் அதிகரித்து காணப்படுகிறது. மாவட்டத்தின் கடைசியில் உள்ளதால் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றனர்.

