/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர்; துர்நாற்றத்தால் நாலுார் மக்கள் அவதி
/
குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர்; துர்நாற்றத்தால் நாலுார் மக்கள் அவதி
குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர்; துர்நாற்றத்தால் நாலுார் மக்கள் அவதி
குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் கழிவுநீர்; துர்நாற்றத்தால் நாலுார் மக்கள் அவதி
ADDED : மே 16, 2024 05:59 AM

நரிக்குடி : நரிக்குடி நாலுாரில் குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருவதால் சீரமைக்க வலியுறுத்தினர்.
நரிக்குடி நாலுாரில் சமீபத்தில் ரூ.பல லட்சம் செலவில் வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டன. ஒரு சில மாதங்கள் ஆன நிலையில், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணிகள் துவங்கின. 4 வீதிகளில் பள்ளம் தோண்டினர். அதில் பதிக்கப்பட்டிருந்த பேவர் பிளாக் கற்கள் வீதியில் அடுக்கி வைத்துள்ளனர்.
இது மக்களுக்கு பெரிதும் இடையூறு ஏற்படுத்தி வருவதோடு, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழி இன்றி குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தில் தேங்கி நிற்கிறது.
துர்நாற்றம் ஏற்பட்டு குடியிருக்க முடியவில்லை. கொசு உற்பத்தியாகி பகலிலே கடிக்கிறது. சிறுவர்கள் நடந்து செல்லும் போது இடறி கழிவு நீருக்குள் விழுகின்றனர். தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
சமீபத்தில் போடப்பட்ட பேவர் பிளாக் கற்களை சேதப்படுத்தி மக்கள் நடக்க முடியாத அளவிற்கு இடையூறு ஏற்படுத்துவதுடன் முறையாக சீரமைக்காததால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. மறுபடியும் சீரமைக்க நிதி தேவைப்படும்.
நிதி ஒதுக்கி சீரமைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிடும். மக்கள் படாத பாடுபடுகின்றனர். கழிவு நீர் எளிதில் வெளியேற வழி ஏற்படுத்தி, பேவர் பிளாக் கற்களை பதித்து வீதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தினர்.