/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், ஆமை வேகத்தில் வாறுகால் பணி
/
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், ஆமை வேகத்தில் வாறுகால் பணி
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், ஆமை வேகத்தில் வாறுகால் பணி
கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், ஆமை வேகத்தில் வாறுகால் பணி
ADDED : ஆக 03, 2024 04:32 AM
சாத்துார்: சாத்துார் நகராட்சி 3வது வார்டுக்குட்பட்ட வெம்பக்கோட்டை ரோட்டில் கழிவுநீர் கலந்து வரும் குடிநீர், குண்டு குழியுமான ரோட்டினால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
முறையான ரோடு, வாறுகால் வசதியில்லை. வெம்பக்கோட்டை ரோடு குறுக்கு சந்திலும், நம்மாழ்வார் காம்பவுண்ட் பகுதியிலும் வாறுகாலில் கழிவுநீர் செல்லவில்லை. நம்மாழ்வார் காம்பவுண்ட், மெயின் வாறுகாலில் இருந்து சிறிய வாறுகாலுக்கு கழிவுநீர் புகுந்து வருகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. கழிவுநீர் செல்வதற்கு முறையான வசதி இல்லாததால் வாறுகால் கட்டப்பட்டும் சுகாதாரம் கேள்விக்குறியாகவே உள்ளது.
சிலர் வீடுகளில் செப்டிக் டேங்க் கட்டாமல் நேரடியாக மனிதக்கழிவை வாறுகாலில் விட்டுள்ளனர். இதனால் இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மதுரை பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த பொது சுகாதார வளாகம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை செயல்பாட்டில் கொண்டுவர இப்பகுதி மக்கள் பலமுறை நகராட்சிக்கு கோரிக்கை விடுத்தும் இன்றுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.