/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முன் வாறுகாலில் தேங்கும் கழிவுநீர்
/
சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முன் வாறுகாலில் தேங்கும் கழிவுநீர்
சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முன் வாறுகாலில் தேங்கும் கழிவுநீர்
சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முன் வாறுகாலில் தேங்கும் கழிவுநீர்
ADDED : மார் 29, 2024 05:52 AM

சிவகாசி : சிவகாசி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு வாறுகாலில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் இங்கு வருபவர்கள் கொசுத் தொல்லையால் அவதிப்படுகின்றனர்.
சிவகாசி அண்ணாதுரை காய்கறி மார்க்கெட்டில் இருந்து சார் பதிவாளர் அலுவலகம், பழைய நகராட்சி அலுவலகம் வழியாக வாறுகால் உள்ளது. இந்த வாறுகால் இது நாள் வரையிலும் துார்வாரப்படாத நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பியுள்ளது. கழிவு நீர் வெளியேற வழி இன்றி ஒரே இடத்தில் தேங்கியுள்ளது.
இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேடும் ஏற்படுகிறது. மேலும் கொசு அதிக அளவில் உற்பத்தியாகி அலுவலகத்திற்கு வருபவர்களை பாடாய்ப் படுத்துகிறது. ஐந்து நிமிடத்திற்கு மேல் அலுவலகத்தில் காத்திருக்க கூட முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தவிர மழைக் காலங்களில் தண்ணீர் வெளியேற வழி இன்றி ரோட்டில் ஓடுகின்றது. எனவே இப்பகுதியில் உடனடியாக வாறுகாலை துார்வார வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.