/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு கூட்டம்
/
பாலியல் துன்புறுத்தல் விழிப்புணர்வு கூட்டம்
ADDED : செப் 13, 2024 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரியின் பெண்கள் மையம் சார்பாக பாலியல் துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர் ஆலோசனைகள் வழங்கினார். கல்லூரி செயலர் சங்கர சேகரன் தலைமை வகித்தார். தலைவர் மயில்ராஜன் முன்னிலை வகித்தார். முதல்வர் செல்லதாய் வரவேற்றார்.
மாவட்ட சமூக நலத்துறை நிதி கல்வியறிவியல் நிபுணர் பரமசிவம், உமா மகேஸ்வரி பேசினர். ஏற்பாடுகளை பெண்கள் மைய உறுப்பினர்கள் செய்தனர்.
ஒருங்கிணைப்பாளர் கமலேஸ்வரி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். உதவி பேராசிரியர் ராதா நன்றி கூறினார்.