ADDED : மே 21, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : வெம்பக்கோட்டை ஊராட்சி இந்திரா நகர் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை சேதமடைந்து இருப்பதால் பள்ளி மாணவர்கள், பயணிகள் சிரமமடைந்து வருகின்றனர்.
வெம்பக்கோட்டை ஊராட்சி இந்திரா நகரில் நிழற்குடை சேதம் அடைந்திருப்பதால் பள்ளி கல்லுாரி மாணவர்கள் மக்கள் நிழற்குடைக்குள் காத்திருக்க வழியின்றி ரோட்டிலேயே காத்திருந்து பஸ் ஏறுகின்றனர்.
வெயில், மழைக்காலங்களில் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் நிழற்குடை முன்பாக சேதமடைந்த மின்கம்பம் போடப்பட்டுள்ளதால் பயணிகள் அவசரத்திற்கு பஸ் ஏற முடியவில்லை. எனவே நிழற்குடை சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

