/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வெடித்து சிதறும் கண்ணாடிகள் வாகனங்களுக்கு விபத்து
/
வெடித்து சிதறும் கண்ணாடிகள் வாகனங்களுக்கு விபத்து
ADDED : மே 02, 2024 04:56 AM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை மேம்பாலங்களின் கீழ்ப்பகுதியில் உள்ள நான்கு சக்கர ஒர்க் ஷாப் வைத்திருப்பவர்கள் வாகனங்களின் உடைந்த கண்ணாடிகளை அடுக்கி வைத்திருப்பதால் வெயிலுக்கு அவை வெடித்து சிதறி அந்த வழியாகச் செல்லும் வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன.
அருப்புக்கோட்டை காந்தி நகர் பகுதியில் மதுரை - தூத்துக்குடி நான்கு வழி ரோட்டில் மேம்பாலம் உள்ளது. இதன் கீழ் பகுதியில் நகருக்கு செல்லும் சர்வீஸ் ரோடு உள்ளது.
இந்த ரோடு ஓரங்களையும் இருபுறமும் வரிசையாக இரு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் உள்ளன. தங்கள் கடைகளுக்கு வரும் வாகனங்களின் உடைந்த கண்ணாடிகளை எடுத்து, மேம்பாலத்தின் கீழ் பகுதியில் வரிசையாக அடுக்கி வைக்கின்றனர். எனவே மாதக் கணக்கில் அப்படியே உள்ளது. இவற்றை அப்புறபடுத்துவதும் இல்லை. தொடர்ந்து வெயிலில் இருக்கும் கண்ணாடிகள் அவ்வப்போது வெடித்து சிதறுகின்றன. சிதறும் கண்ணாடி துண்டுகள் ரோட்டில் விழுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் டயர்களை பதம் பார்க்கிறது.
தற்போது கடந்த சில நாட்களாக கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலில் கண்ணாடிகள் உடைந்து சிதறுகின்றன. பாலத்தை பராமரிக்கும் நெடுஞ்சாலை துறையினர், தேவையற்ற கழிவு பொருட்கள், கண்ணாடி பொருட்களை பாலத்தின் ஓரத்தில் கொட்ட கூடாது என, கடைகாரர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

