நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை -விருதுநகர் ரோட்டில் அலைபேசி கடை உள்ளது. அதன் உரிமையாளர் ராஜ்குமார் 32, நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு கடையை பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை 8:20 மணிக்கு கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே சென்று பார்த்த போது ஒரு அலைபேசி, கல்லாவில் இருந்த பணம் ரூ.ஆயிரம், கம்ப்யூட்டர் மானிட்டர், ஒரு ஸ்பீக்கர் உட்பட திருடு போனது தெரிந்தது. அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

