/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு
/
சாத்துார் ரேஷன் கடைகளில் பாமாயில் தட்டுப்பாடு
ADDED : ஜூலை 31, 2024 04:59 AM
சாத்துார், : சாத்துார் ரேஷன் கடைகளில் பாமாயில் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர்.
சாத்துார் நகரில் ரேஷன் கடைகளில் பாமாயில் கடந்த இரண்டு மாதங்களாக போதுமான அளவில் சப்ளை ஆகாததால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.மக்கள் கடைக்காரரிடம் கேட்டால் பாமாயில் மிககுறைவாகவே சப்ளை ஆனது முதலில் வந்தவர்களுக்கு விற்று விட்டதாககூறுகின்றனர். இதனால் குடும்ப அட்டைதாரர்கள் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர்.
ஒவ்வொரு கடையிலும் உள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு பாமாயில் விநியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்துார் வட்ட வழங்கல் அலுவலர் சுந்தரபாரதி கூறியதாவது: 2 மாதமாக தமிழகம் முழுவதும் பருப்பு, பாமாயில் பற்றாக்குறை இருந்தது.
டெண்டர் தாமதம் ஆனதால் இந்த நிலை தற்போது நேற்று முன்தினம் பாமாயில் வர துவங்கியுள்ளது சாத்தூருக்கு இன்னும் 5600 பாக்கெட்டுகள் தான் வர வேண்டி உள்ளது. ஜூன் மாதம் வரை பொதுமக்கள் அனைவருக்கும் அனைத்து குடிமை பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தமாதம் சீராகிவிடும்என்றார்.

