/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காட்சிப்பொருளான நாய்கள் கருத்தடை மையம்
/
காட்சிப்பொருளான நாய்கள் கருத்தடை மையம்
ADDED : மே 12, 2024 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நகராட்சி மயானத்தில் நாய்களுக்கான நவீன வசதிகளுடன் கூடிய கருத்தடை மையம் கடந்த ஆண்டு கட்டப்பட்டது.
ஆனால், கட்டடம் பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ளது. இதற்காகசெலவழிக்கப்பட்ட லட்சக்கணக்கான நிதி வீணாக கிடக்கிறது. நகரில் நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. நாய்களைப் பிடித்து கருத்தடை செய்ய நகராட்சி எந்தவித அக்கறை காட்டுவது இல்லை. நாய்களைப் பிடித்து கருத்தடை செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்காமல் நகராட்சி அவசரம் அவசரமாக இந்த கருத்தடை மையத்தை கட்டி காட்சி பொருளாக வைத்துள்ளது.