/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சார் - பதிவாளர் வீடு மதிப்பீடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
/
சார் - பதிவாளர் வீடு மதிப்பீடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
சார் - பதிவாளர் வீடு மதிப்பீடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
சார் - பதிவாளர் வீடு மதிப்பீடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி
ADDED : மார் 28, 2024 11:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரைச் சேர்ந்தவர் முத்துசாமி, 57; தற்போது செங்கல்பட்டில் சார் - பதிவாளராக உள்ளார்.
இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்துார் வன்னியம்பட்டி விலக்கு அருகே அவர் புதிதாக கட்டி உள்ள வீட்டை லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை 9:30 மணிக்கு மதிப்பீடு செய்தனர்.
அவர்களின் அறிக்கைக்கு பின், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தனர்.