/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசி சாட்சியாபுரம் பால பணிகள் துவக்கம் முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ADDED : ஆக 12, 2024 03:45 AM

சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
சிவகாசி --- ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க ஜன. 26 ல் தேதி பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து ரயில்வே மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு தலைமையில் ஜூலை 26 ல் மேம்பால பணிகள் அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. தொடர்ந்து பணிகள் துவங்க உள்ள நிலையில் முதல் கட்டமாக பாலம் அமைய உள்ள இடத்தில் இருந்த பயணிகள் நிழற் குடை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் எடுத்து அகற்றப்பட்டது. மேலும் பொறியாளர்கள், அதிகாரிகள் கள ஆய்வுப் பணி மேற்கொண்டனர். தொடர்ந்து இன்று பாலத்திற்கான துாண் அமைப்பதற்கான பணிகள் துவங்க உள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி ரயில்வே கேட் மூடப்பட்டு பஸ்கள், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என டி.எஸ்.பி., சுப்பையா அறிவுறுத்தியுள்ளார்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கையகப்படுத்தப்பட்ட இடத்தின் உரிமையாளர்களுக்கு கட்டடங்களை அகற்றுவது குறித்து ஏற்கனவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே உரிமையாளர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லையெனில் அரசு சார்பில் அகற்றப்படும், என்றார்.