/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்--
/
ஆறாக ஓடும் பாதாள சாக்கடை நீர்--
ADDED : ஆக 08, 2024 04:21 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகராட்சி பாதாள சாக்கடை திட்ட குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு புதிதாக போட்டுள்ள தார் ரோட்டில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. மக்கள் அவதிக்குள்ளாவதுடன் கொசு தொல்லை, நோய் தொற்று பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜபாளையம் நகராட்சி 3வது வார்டு தொட்டியபட்டி ரோட்டில் பாதாள சாக்கடை குழாய் வழியே கழிவுநீர் வெளியேறி மாதக் கணக்கில் ரோட்டை கடந்து சென்று வருகிறது.
நகராட்சியின் ஒரு பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் சஞ்சீவி மலை பின்புறம் நகராட்சி குப்பை கிடங்கு அருகே செயல்படும் சுத்திகரிப்பு நிலையம் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது.
இப்பகுதி அழகாபுரி குடியிருப்பு தொட்டியபட்டி ரோடு என 3000 திற்கும் அதிகமான மக்கள், நுாற்றுக்கும் அதிகமான சிறிதும் பெரிதுமான தொழில் நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் தொட்டியபட்டி ரோடு வழியே செல்லும் பாதாள சாக்கடை குழாய் ரயில்வே கேட் அருகே சரிவர பராமரிக்கப்படாமல் கழிவு நீர் பல மாதங்களாக ஆறாக ஓடுகிறது.
இதனால் துர்நாற்றம், கொசு தொல்லை, கடந்து செல்லும் வாகனங்கள் கழிவுநீர் தெளிப்பு, நோய் தொற்று உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.
மாதக்கணக்கில் தொடரும் இச்சிக்கலுக்கு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதே நிலை தொடர்கிறது. நிரந்தர தீர்வு காண இப்பகுதியினர் எதிர்பார்த்துள்ளனர்.