ADDED : ஆக 26, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:
சிவகாசி காளீஸ்வரி கல்லுாரி இளநிலை வணிக நிர்வாகவியல் துறை சார்பில் உலக தொழில் முனைவோர் தினத்தை முன்னிட்டு வணிகத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். மாணவி வின்சிசெபிலா வரவேற்றார். மாணவி ராகவர்ஷினி சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். சிவகாசி நிலா மண்டல பயிற்சியாளர் ராஜ்குமார் பேசினார். மாணவி காவியா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவன் பிரதீப் ராஜ் நன்றி கூறினார்.

