ADDED : ஜூலை 25, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை, ஜூலை 25-
அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை , அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு மண் ,நீர் பரிசோதனை ஆய்வகப் பயிற்சி நடந்தது.
அருப்புக்கோட்டை அருகே விளாத்திகுளம் கே. சுந்தரேஸ்வரபுரத்தில் சுமிந்தர் இந்திய ஆர்கானிக்ஸ் நிறுவனத்தில் வேளாண்மை வேதியல் உயிரியல் மாணவர்களுக்கு குறுகிய கால சான்றிதழ் படிப்பு, ஆய்வகப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் ரமணாஸ் கல்லூரி மாணவிகள் சான்றிதழ் படிப்பிற்காக தங்களை பதிவு செய்து கொண்டனர். துவக்க விழாவிற்கு திட்ட மேலாளர் குரு சரிதான், மாநில மேலாளர் பூர்ண சந்திரராவ், பி.டி.ஓ., தினகரன், கூடுதல் பி. G.ஓ., ராஜ்குமார் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.
----
