/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலசலிங்கம் பல்கலையில் சூரிய ஆய்வு பயிற்சி
/
கலசலிங்கம் பல்கலையில் சூரிய ஆய்வு பயிற்சி
ADDED : ஏப் 18, 2024 04:52 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலையில் ஐ.எஸ்.ஆர். ஓ. நிறுவனத்தின் சார்பில் சூரிய குடும்ப ஆய்வு என்ற தலைப்பில் பயிற்சி ஏப்ரல் 24 முதல் மே 10 வரை நடக்கிறது.
இதில் இன்ஜினியரிங், அறிவியல் துறைகளை சேர்ந்த இளங்கலை, முதுகலை இறுதி ஆண்டு மாணவர்கள் பங்கேற்கலாம். சிறந்த பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஐ.எஸ்.ஆர்.ஓ. மூலம் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்கு வர விரும்பும் மாணவர்கள் ஏப்ரல் 19க்குள் ஏரோநாட்டிக்கல் துறை தலைவர் சரத்குமார் செபாஸ்டினை 76399 72833 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் தெரிவித்துள்ளனர்.

