/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
எஸ்.பி., ஆய்வு: மதுவிற்ற 6 பேர் கைது
/
எஸ்.பி., ஆய்வு: மதுவிற்ற 6 பேர் கைது
ADDED : ஜூலை 05, 2024 11:14 PM

விருதுநகர்: விருதுநகரில் எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா ஆய்வு செய்ததில் திருட்டுத்தனமாக மது விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டதுடன், 41 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர் மாலைப்பேட்டை தெரு டாஸ்மாக் அருகே பாரில் காலை 11:00 மணிக்கு முன்பாக மது விற்றதாக புகார் வந்ததை யொட்டி எஸ்.பி., பெரோஸ் கான் அப்துல்லா திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது சத்திரரெட்டியபட்டியை சேர்ந்த மாரிசெல்வம் 45, பாண்டியன் நகர் மாரிக்குமார் 40, ரோசல்பட்டி வெற்றிவேல் 25, ஆகிய மூவரும் மது விற்றது தெரிந்தது. மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 19 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதே போல் கச்சேரி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரிலும் சோதனை செய்தார். அங்கும் திருட்டுத்தனமாக மது விற்ற பாண்டியன் நகரை சேர்ந்த ராமர் 40, அம்பேத்கர் தெருவை சேர்ந்த யோகராஜ் 44, எழிலரசன் ஆகியோரை மூவரும் கைது செய்து அவர்களிடம் இருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேற்கு போலீசாரின் பணி நேரத்திலேயே எஸ்.பி., யாரிடமும் கூறாமல் நேரடியாக சர்ப்ரைஸ் செக் செய்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.