/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
/
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
இட நெருக்கடி, இருக்கைகள் இல்லை, திருடர்கள் தொல்லை; அவஸ்தையில் சாத்துார் பஸ் ஸ்டாண்ட் பயணிகள்
ADDED : ஜூன் 08, 2024 05:38 AM

சாத்துார் : சாத்துார் நகராட்சி அண்ணா பவளவிழா பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி, இருக்கைகள் இல்லாதது, பிக்பாக்கெட் திருடர்கள் தொல்லை போன்வற்றால் பயணிகள் மிகுந்த அவஸ்தையடைந்து வருகின்றனர்.
சாத்துார் நகராட்சி அண்ணா பவள விழா பஸ் ஸ்டாண்ட் 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஒரே நேரத்தில் 10 முதல் 15 பஸ்கள் மட்டுமே நிற்கும் நிலை உள்ளது. தனியார், அரசு பஸ்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போதுமான இடவசதி இல்லாததால் பஸ்கள் பஸ்டாண்டிற்குள் வந்து நிற்க முடியாத நிலை உள்ளது.
பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள எத்தல் ஹார்வி ரோடு, மெயின் ரோட்டிலும் இடப்பற்றாக்குறையால் பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உள்ளது. பயணிகள் பஸ்சிற்காக காத்திருக்க இருக்கை வசதிகள் இல்லை. பிளாட்பாரத்தில் உள்ள இரும்பு துாண்களின் மேடைகளில் அமர்ந்து காத்திருக்கும் நிலை உள்ளது.
பிளாட்பாரத்தில் நிறுத்துவதற்காக டவுன் பஸ் கள் ரிவர்ஸ் வரும்போது பின்னால் இரும்புத்தூண் மேடையில் அமர்ந்திருக்கும் பயணிகள் மீது இடித்து பயணிகள் காயம் அடைந்து வருகின்றனர். இட பற்றாக்குறை காரணமாக பஸ்களை நிறுத்துவதில் அடிக்கடி டிரைவர்களிடையே அடிக்கடி தகராறு நடக்கும் நிலை உள்ளது. செவ்வாய், வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் கோட்டூர் குருசாமி கோயிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இதுபோன்ற விடுமுறை நாட்களில் பஸ் ஸ்டாண்ட் பயணிகளால் நிரம்பி வழியும் நிலையுள்ளது. இது போன்ற தருணங்களில் பிக் பாக்கெட் திருடர்கள் நகை, பணத்தை திருடி செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டிற்குள் பஸ்கள் வரும் போது பெண்கள் குழந்தைகளை கையில் பிடித்தபடி இங்கும் அங்கும் அலையும் நிலை உள்ளது. முதியவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இட பற்றாக்குறை காரணமாக பஸ் ஸ்டாண்டில் கட்டண கழிப்பறை சிறிய அளவில் கட்டப்பட்டுள்ளது. அதிகமான பயணிகள் வரும்போது இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் காத்திருக்கும் நிலை உள்ளது.
டிரைவர்களுக்குள் மோதல்
ஞானசேகர் ராஜா. சாத்துார்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து செல்கின்றன. தனியார், அரசு பஸ் டிரைவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. செவ்வாய் சனி ஞாயிறுக்கிழமைகளில் பஸ்கள் வந்தவுடன் வெளியேறும் நிலை உள்ளது.
இதனால் வெளியூர் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். இடப்பற்றாக்குறையால் அந்தந்த வழித்தட பிளாட்பார்மில் நிறுத்தாமல் மாற்றி, மாற்றி நிறுத்துகின்றனர்.
பள்ளிகள் திறந்தால் மாணவர்களால் பஸ் ஸ்டாண்ட் நிரம்பி வழியும். இதனால் நெரிசல் மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.
குளமாக மாறும் பஸ் ஸ்டாண்ட்
பாபு, சாத்துார்: பஸ் ஸ்டாண்ட் மிகவும் பள்ளத்தில் உள்ளது. ரோடு பல அடி உயரம் உயர்ந்து விட்டதாலும். மரியன் ஊரணியில் இருந்து வரும் மழை நீர் முழுவதும் பஸ் ஸ்டாண்டிற்குள் புகுந்து பஸ் ஸ்டாண்ட் நீச்சல் குளமாக மாறிவிடுகிறது. முட்டளவு தண்ணீர் நிற்கும் நிலை உள்ளது. சிவகாசி விருதுநகரில் இருந்து வரும் பஸ்கள் பஸ் ஸ்டாண்டிற்குள் செல்லாமல் வெளியிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.
இதனால் மெயின் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இடப்பற்றாக்குறையால் பயணிகளும் டிரைவர்களும் அவதிப்படுகின்றனர்.
தீர்வு
சாத்துார் அண்ணா நகரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இங்கு விரைந்து பஸ் ஸ்டாண்ட் கட்ட தேவையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பழைய பஸ் ஸ்டாண்டில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கும்.