/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவி மையம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு உதவி மையம்
ADDED : மார் 08, 2025 03:54 AM
விருதுநகர் : கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் 2024-25 கல்வியாண்டில் பிளஸ் டூ தேர்வு எழுதி கொண்டிருக்கும் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை உதவி மையம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட உள்ளது. மாணவர்கள் தங்களது படிப்புகள் குறித்த முழுமையான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.உயர்கல்வி சேர்க்கைக்கான இணையவழி, நேர்முக விண்ணப்ப வழிமுறைகள் குறித்த விளக்கங்களும் பெற்று கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள், அது தொடர்பான பயம், தேர்வு முடிந்த பின் தொடரும் மன அழுத்தம் தொடர்பான உளவியல் ஆலோசனைகள் வழங்கப்படும்.
அரசுத்துறைகள் வழங்கும் கல்வி உதவித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கல்வி கடன் குறித்த விபரங்களும் பெறலாம். இம்மையமானது பிளஸ் டூ தேர்வு முடிந்த மார்ச் 26 முதல் செயல்படும்.
தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல், உளவியல் சார்ந்த வழிகாட்டல் ஆகியவை பெற்று பயன் பெறலாம், என்றார்.