/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிகளை விரைந்து முடிங்க --தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
/
பணிகளை விரைந்து முடிங்க --தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
பணிகளை விரைந்து முடிங்க --தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
பணிகளை விரைந்து முடிங்க --தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 07, 2024 01:40 AM
ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு நகராட்சி தலைவரிடம் தொழில் வர்த்தக சங்கம் செயலாளர் நாராயணசாமி தலைமையில் முறையிட்டனர்.
ராஜபாளையத்தில் நான்கு வருடங்களுக்கு முன் தொடங்கிய பாதாள சாக்கடை, தாமிரபரணி குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் முழுமை அடையாமலும் நகர்வழியை செல்லும் தேசிய நெடுஞ்சாலை முழுமையாக செப்பனிடப்படாமல் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.
ஏற்கனவே தேசிய நெடுஞ்சாலை ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிட்டு வர்த்தக சங்கம் சார்பில் கடையடைப்பு அறிவித்து அதிகாரிகளின் சமாதானத்தால் திரும்ப பெறப்பட்டது. இந்நிலையில் ஒப்புக்கொண்டபடி நெடுஞ்சாலை பணிகளை விரைவுப்படுத்த கோரியும் சாலையின் இரண்டு பக்கமும் மழைநீர் வடிகால்களை சரி செய்யவும் நகராட்சி தலைவர் பவித்ராவை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். தொழில் வர்த்தக சங்கம், இணை சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.