நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா எட்டாம் நாளில் நாமத்துவார் பிரார்த்தனை மைய பொறுப்பாளர் கிருஷ்ண சைதன்ய தாஸ் சொற்பொழிவாற்றினார்.
அவர் பேசியதாவது; இறை நாமத்தை பாடுவதால் நமது அனைத்து கஷ்டங்களும் விலகும். எல்லா நன்மைகளும் பெருகும்.
கஷ்ட காலத்தில் திரவுபதி கோவிந்தா என அழைத்ததால் கிருஷ்ணர் வஸ்திரம் கொடுத்து காப்பாற்றினார். இறை நாமத்தை நாம் எப்படி கூறினாலும் பலன் கிடைக்கும். நாம் நாள்தோறும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா மகா மந்திரத்தை சொல்லி எல்லா விதமான நன்மைகளையும் பெறுவோம் என்றார்.