/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை புதிய ஷோரூம் திறப்பு விழா
/
ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை புதிய ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை புதிய ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை புதிய ஷோரூம் திறப்பு விழா
ADDED : ஜூலை 08, 2024 06:37 AM

ராஜபாளையம் : ராஜபாளையத்தில் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகையின் 8வது கிளை தென்காசி ரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரே திறப்பு விழா நடந்தது.
ஆனந்தாஸ் குரூப் பீம் ஆனந்த் உள்ளிட்ட நகர் பிரமுகர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர். தொழிலதிபர்கள் அரவிந்த் குடும்பத்தினர், பேஷன் வேர்ல்டு குமார், டைகர் சம்சுதீன், பிரபு ராஜா ராமசுப்பிரமணியன், மதுரை எஸ்.பி., அலுவலக நிர்வாக அதிகாரி மீனா பங்கேற்றனர்.
மதுரையை தலைமையாக கொண்டு 34 ஆண்டுகளாக நகை வணிகத்தில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப புதிய டிசைன்களையும், நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப கலெக்சன்களையும் ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை வழங்கி வருகிறது.
திறப்பு விழா சலுகையாக ரூ. 25,000க்கு தங்கம் வாங்குவோருக்கு தங்க நாணயம் இலவசம். வைரம் காரட்டிற்கு ரூ.15,000 தள்ளுபடி, பெரும் பான்மையான வெள்ளிப் பொருட்கள், வெள்ளி கொலுசுகளுக்கு செய்கூலி சேதாரம் இல்லை என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை ஷோரூம் உரிமையாளர்கள் செல்வம், ஜெகதீசன், மணி வாசகம், சிவசங்கர் செய்திருந்தனர்.