/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., மேல ரத வீதியில் ஓடுது கழிவு நீர்
/
ஸ்ரீவி., மேல ரத வீதியில் ஓடுது கழிவு நீர்
ADDED : ஜூலை 07, 2024 01:39 AM

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் மேல ரத வீதி ரோட்டில் கழிவுநீர் செல்வதால் அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் சிரமத்திற்களாகி வருகின்றனர்.
ஆண்டாள் கோயில் தெற்கு, மேல ரத வீதிகளில் தரைத்தளத்தில் மின்சார வயர்கள் செல்வதற்காக ரோடுகள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் கழிவுநீர் வாறுகால் அடைப்பட்டு கிடக்கிறது. இதனை அவ்வப்போது நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து வந்தாலும் ரோட்டிலும், வீடு, கடைகளின் வாசல்களிலும் கழிவு நீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இவ்வழியாக செல்லும் மக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
நகராட்சி இன்ஜினியர் கோமதி சங்கர் கூறுகையில், மின்வாரியத் துறையினர் தோண்டிய பள்ளத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீடுகளுக்குள் கழிவு நீர் செல்லும் நிலை ஏற்பட்டது. ஒவ்வொரு வீடாக ஆய்வு செய்து வெளியேற்றிய தண்ணீர் தான் ரோட்டில் காணப்படுகிறது. தற்போது சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது ,என்றார்.