/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
/
ஸ்ரீவி., ரேஷன் கடையில் அதிகாரிகள் ஆய்வு
ADDED : மே 10, 2024 11:43 PM
ஸ்ரீவில்லிபுத்துார்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூரில் ரேஷன் கடையை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து, புகாருக்கு உள்ளான சீனியை திரும்ப பெற்று புதிய சீனியை வழங்கினர். மேலும் ரேஷன் கடையில் இருந்த 2 சீனி மூடைகளையும் அப்புறப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் துடியாண்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த மக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமுக்குளம் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள ரேஷன் கடையில் சீனி வாங்கியுள்ளனர். அதனை பயன்படுத்தும் போது எலி இறந்து கிடந்ததால் வீசும் துர்நாற்றம் வீசியுள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் தாசில்தார் முத்துமாரி, கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ஜெயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் முத்து சங்கரன் மற்றும் அதிகாரி குழுவினர் சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் நேரடி ஆய்வு செய்தனர்.
பின்னர் துடியாண்டி அம்மன் கோயில் மக்களை வரவழைத்து அவர்களிடம் இருந்த பழைய சீனியை திரும்ப பெற்று புதிய சீனி வழங்கப்பட்டது. மேலும் கடையில் இருந்த 2 சீனி மூடைகளும் அப்புறப்படுத்தப்பட்டது.
இதனால் துடியாண்டியம்மன் கோயில் தெரு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தினமலர் நாளிதழுக்கும், உடனடி நடவடிக்கை எடுத்த அரசு அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்தனர்.