sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவி.,செண்பகத் தோப்பில் அமைகிறது சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்

/

ஸ்ரீவி.,செண்பகத் தோப்பில் அமைகிறது சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்

ஸ்ரீவி.,செண்பகத் தோப்பில் அமைகிறது சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்

ஸ்ரீவி.,செண்பகத் தோப்பில் அமைகிறது சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம்


ADDED : ஜூலை 27, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் வனத்துறை சார்பில் சாம்பல் நிற அணில்கள் அருங்காட்சியகம் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு சரணாலயங்கள் இருந்தாலும், தற்போதைய ஸ்ரீவில்லிபுத்துார் மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத் தோப்பில் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் உள்ளது. 480 சதுர கிலோ மீட்டர் பரப்பில் உள்ள இந்த சரணாலயத்தில் ஏராளமான அரிய வகை சாம்பல் நிற அணில்கள் உள்ளது.

1989ல் உருவாக்கப்பட்ட இந்த சரணாலயத்தில் சாம்பல் நிற அணில்கள் மட்டுமின்றி புலி, சிறுத்தை, யானை, மான்கள், கரடி உட்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தின் ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் செண்பகத் தோப்பு காட்டழகர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்களும், மழை பெய்து பேயனாற்றில் தண்ணீர் வரத்து ஏற்பட்டால் குளிப்பதற்கு வெளியூர்களை சேர்ந்த மக்களும் அதிகளவில் வருகின்றனர்.

இவ்வாறு வரும் மக்கள் சாம்பல் நிற அணில்கள் பற்றி முழு அளவில் தெரிந்து கொள்ள வசதியாக செண்பகத் தோப்பில் அருங்காட்சியகம் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகின்றனர். இது விரைவில் மக்கள் பார்வைக்கு கொண்டு வரப்படுமென வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us