/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., வன்னியம்பட்டி விலக்கில் உயர்மின் கோபுர விளக்கு
/
ஸ்ரீவி., வன்னியம்பட்டி விலக்கில் உயர்மின் கோபுர விளக்கு
ஸ்ரீவி., வன்னியம்பட்டி விலக்கில் உயர்மின் கோபுர விளக்கு
ஸ்ரீவி., வன்னியம்பட்டி விலக்கில் உயர்மின் கோபுர விளக்கு
ADDED : ஏப் 28, 2024 06:25 AM

ஸ்ரீவில்லிபுத்தூர், : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கில் எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று இடங்களில் உயர்மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி விலக்கில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மட்டுமின்றி சுற்று பகுதியில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன இப்பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் தினமும் இங்கு வந்து வெளியூர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகரிக்கும் வாகன போக்குவரத்தால் விபத்துகளை தவிர்க்க தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டு சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் இருந்த பயணியர் நிழற்குடை இடிக்கப்பட்டது மின்கம்பங்கள் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதி தினமும் இரவு 6:00 மணிக்கு மேல் இருண்டு காணப்பட்டது.
எனவே, மக்கள் நலன் கருதி வன்னியம்பட்டி விலக்கில் உயர்மின் கோபுர விளக்கும் பயணியர் நிழற்குடையும் அமைக்க வேண்டுமென தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டு வந்தது.
இதனடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ.மான்ராஜ் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மூன்று இடங்களில் உயர்மின் கோபுர விளக்கு அமைத்துள்ளார். இது அப்பகுதி மக்களுக்கும், இரவு நேரங்களில் ரோட்டை கடக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பேருதவியாக உள்ளது.
அதே நேரம் அப்பகுதியில் ரோட்டில் இருபுறமும் பயணியர் நிழற்குடை இல்லாததால் மக்கள் வெயிலுக்கும், மழைக்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, உடனடியாக நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

