/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
/
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
ADDED : மார் 29, 2024 05:50 AM

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஸ்ரீவி., பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா நேற்று (மார்ச் 28) முதல் துவங்கி ஏப். 9 வரை 13 நாட்கள் பூக்குழித் திருவிழா நடக்கிறது.
நேற்ற அதிகாலை 4:30 மணிக்கு மகா கணபதி பூஜை, புண்யாகவாசனம், காப்பு கட்டுதல் நடந்தது.
பின்னர் மாரியம்மன் கோவில் தெரு சாலியர் பொது சாவடியிலிருந்து கொடி பட்டம் புறப்பட்டு முக்கிய வீதிகள் சுற்றி கோயிலை வந்தடைந்தது. அர்ச்சகர் சுந்தர் கொடியேற்றி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.
ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து தினமும் காலையில் அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவில் வீதியுலாவும் நடக்கிறது. விழாவில் ஏப். 8ல் பூக்குழியும், ஏப். 9ல் தேரோட்டமும் நடக்கிறது.