/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய் சுவரில் வளரும் மரக்கன்று
/
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய் சுவரில் வளரும் மரக்கன்று
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய் சுவரில் வளரும் மரக்கன்று
ஸ்ரீவி., பெரியகுளம் கண்மாய் சுவரில் வளரும் மரக்கன்று
ADDED : மே 26, 2024 03:45 AM

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாய் தடுப்பு சுவரில் மரக்கன்று வளர்வதால் கரையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதனை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயின் பிரதான கால்வாய்க்கும், திருமுக்குளத்தின் தெற்கு கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் மதகு தடுப்பு சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த தடுப்பு சுவர் தற்போது கற்களுக்கு இடையான சிமெண்ட் பூச்சுகள் கரைந்து சேதமடைந்து இடைவெளி ஏற்பட்டு வருகிறது. இந்த இடைவெளி பகுதியில் தற்போது ஒரு ஆல மரக்கன்று பெரிதாக வளர்ந்து வருகிறது.
தற்போது திருமுக்குளத்தில் அதிகளவில் தண்ணீர் உள்ள நிலையிலும், தொடர்ந்து மழை பெய்து ஈரத்தன்மை அதிகரித்துள்ள நிலையில் கண்மாய்கரை தடுப்பு சுவர் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
இதன் வழியாக மினி பஸ், கார், வேன், கனரக வாகனங்கள் செல்லும்போது அழுத்தம் தாங்காமல் தடுப்பு சுவருக்கு மேலும் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் நிகழும் முன்பு கண்மாய்க்கரை தடுப்பு சுவரில் வளர்ந்துள்ள மரக்கன்றுகளை முழு அளவில் அப்புறப்படுத்தி, தடுப்பு சுவரை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது ஸ்ரீவில்லிபுத்தூர் மக்களின் எதிர்பார்ப்பாகும்.