/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு
/
ஸ்ரீவி., நீதிமன்றத்தில் சேட்டை செய்த குரங்கு
ADDED : ஜூலை 09, 2024 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நீதிமன்ற வளாகத்தில் புகுந்த குரங்கை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
ஒரு குரங்கு, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்தது. நீதிமன்றத்தின் பல்வேறு பகுதிகளில் சர்வ சுதந்திரமாக சுற்றி திரிந்தது.
இதுகுறித்து நீதிமன்றத்தில் இருந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வனச்சரக அலுவலர் செல்வமணி தலைமையில் வனத்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் கூண்டு வைத்து சேட்டை செய்து வந்த குரங்கை நேற்று மாலை பிடித்து, செண்பகத்தோப்பு வனப்பகுதியில் விட்டனர்.