/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி., வத்திராயிருப்பை குளிர்வித்த மழை
/
ஸ்ரீவி., வத்திராயிருப்பை குளிர்வித்த மழை
ADDED : மே 06, 2024 12:26 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு பகுதியில் பெய்த மழையினால் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது.
நேற்று காலை 8:00 மணி முதல் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்ட நிலையில், மாலை 5:00 மணிக்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வெயிலின் தாக்கம் குறைந்து, வானில் மேகங்கள் திரண்டு இடி, மின்னல், காற்றுடன் மழை பெய்ய துவங்கியது.
கூமாபட்டி, வத்திராயிருப்பு, தாணிப்பாறை பகுதிகளில் இருந்து மெதுவாக காற்றுடன் நகர்ந்த மழை கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளிலும் குளிர்ந்த சூழல் ஏற்பட்டு மழை பெய்தது. இதனால் பல நாட்கள் வெயிலின் தாக்கத்தில் மிகுந்த சிரமத்திற்கு ஆளான மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.