/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாநகராட்சியாக மாறும் ராஜபாளையம் நகராட்சி இணையும் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சிகள்
/
மாநகராட்சியாக மாறும் ராஜபாளையம் நகராட்சி இணையும் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சிகள்
மாநகராட்சியாக மாறும் ராஜபாளையம் நகராட்சி இணையும் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சிகள்
மாநகராட்சியாக மாறும் ராஜபாளையம் நகராட்சி இணையும் ஸ்ரீவில்லிபுத்துார் ஊராட்சிகள்
ADDED : மே 10, 2024 04:30 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சிகளையும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 9 ஊராட்சிகளையும் இணைத்து ராஜபாளையம் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளை ஊராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு உள்ளனர்.
தொழில் நகரமான ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் ஒரு நகராட்சி, ஒரு ஊராட்சி ஒன்றியம், 2 பேரூராட்சிகள், 36 ஊராட்சிகள் உள்ளது. அதிகரிக்கும் மக்கள் தொகை, தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியாலும் ராஜபாளையம் நகராட்சி எல்லையை சுற்றியுள்ள ஊராட்சிகளிலும் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது.
இத்தகைய ஊராட்சிகளில் போதிய வருவாய் இல்லாததால் அங்கு போதிய அளவிற்கு ரோடு, வாறுகால் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்ய முடியவில்லை. இதனையடுத்து ராஜபாளையம் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்து, சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் , ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள சில ஊராட்சிகளை ராஜபாளையம் நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் படிக்காசு வைத்தான் பட்டி, கொத்தங்குளம், கலங்காப்பேரி, இடையன்குளம், இனாம்செட்டிகுளம் ஆகிய 5 ஊராட்சிகளையும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சத்திரப்பட்டி, சம்சிகாபுரம், மேலப்பாட்டம் கரிசல் குளம், மேல ராஜகுல ராமன், எஸ்.ராமலிங்கபுரம் உட்பட 9 ஊராட்சிகளையும் இணைத்து ராஜபாளையம் மாநகராட்சியாக உருவாக்கப்பட உள்ளது.
தற்போதைய ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் டிசம்பர் மாதத்தில் முடிவடைகிறது. அதன் பின்பு உடனடியாக தேர்தல் நடத்தாமல் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் எல்லைகளை மறு வரையறை செய்து, அப்பணிகள் முழுமையாக முடிந்த பிறகு 2025 டிசம்பர் அல்லது 2026 ஜனவரியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.